×

திருப்போரூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சில்மிஷம்: கார் ஓட்டுநர் கைது

திருப்போரூர்: திருப்போரூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கார் ஓட்டுநரை, போலீசார் கைது செய்தனர். திருப்போரூர் நெம்மேலி சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் கர்ணன். இவரது, மனைவி செல்வி (38). இவர், கடந்த 18ம்தேதி பகல் 2 மணியளவில் வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென உள்ளே நுழைந்த வாலிபர், அவரிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், பயந்துபோன செல்வி கூச்சல் போட்டுள்ளார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து, அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து திருப்போரூர் போலீசில் ஒப்படைத்தனர்.

அந்த வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம், மதுராம்பட்டு கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (38) என்பதும், சில மாதங்களுக்கு வாடகை கார் ஓட்டுநர் என்பதும், பாதிக்கப்பட்ட பெண்ணை ஒருமுறை காரில் அழைத்து வந்து விட்டிருப்பதும், தற்போது வேறு ஒருவரை இதே குடியிருப்பில் இறக்கி விட்டபோது செல்வியை பார்த்ததால் அவரிடம் பேச்சுக்கொடுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. மேலும், வழக்குபதிவு செய்த போலீசார், விஜயகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post திருப்போரூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சில்மிஷம்: கார் ஓட்டுநர் கைது appeared first on Dinakaran.

Tags : Smilmish ,Tiruporur ,Thiruporur ,Karnan ,Tiruporur Nemmeli Road ,Thiruporo ,
× RELATED திருப்போரூர் பேரூராட்சியில் உள்ள கழிப்பறைகளை சீரமைக்க கோரிக்கை