பொன்னேரி: பொன்னேரியில் பிரபல தனியார் பிரியாணி கடையில் பிரியாணி, சிக்கன் லெக் பீஸ் வாங்கி உட்கொண்ட 10க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அதில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பொன்னேரியில் பிரபல தனியார் நிறுவனத்தின் பிரியாணி கடை இயங்கி வருகிறது. இந்த பிரியாணி கடையில் அசைவ உணவின் தரம் தொடர்பாக வாடிக்கையாளர்கள் அவ்வப்போது புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கடையில் கடந்த திங்களன்று பிரியாணி மற்றும் சிக்கன் லெக் பீஸ் உட்கொண்ட 10க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதில் 3 பேர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புரட்டாசி மாதம் பிறப்பை முன்னிட்டு கடந்த திங்களன்று ஏராளமானோர் இந்த கடையில் பிரியாணி மற்றும் சிக்கன் பீஸ் வாங்கியுள்ளனர். இந்த அசைவ உணவு தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் பல்வேறு உபாதைகளை சந்தித்து வருகின்றனர். பெருமளவில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்பாக உணவு பாதுகாப்பு துறையினர் இந்த பிரியாணி கடையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
The post பொன்னேரி பிரியாணி கடையில் சிக்கன் சாப்பிட்ட 10 பேருக்கு வாந்தி, மயக்கம்: 3 பேர் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.