×

பாஜ கொடியேற்று விழா

கடத்தூர், செப்.20: கடத்தூர் அருகே ராமியணஅள்ளி பஸ் ஸ்டாப் மற்றும் தென்கரைக்கோட்டை சாலை உள்ளிட்ட இடங்களில், மோடி பிறந்த நாளையொட்டி பாஜ கொடியேற்று விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கடத்தூர் கிழக்கு ஒன்றிய பாஜ தலைவர் சிற்றரசு தலைமை வகித்து, கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார். தொடர்ந்து அங்குள்ள பள்ளி வளாகத்தில் புங்கன், வேம்பு, நாவல், அரசு, வில்வம் உள்ளிட்ட மரக்கன்று நடவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் வரதராஜன், மகளிரணி சுமதி, சந்திரா, மெய்யறிவு, ஜோதிலிங்கம், பேச்சிமுத்து, சரவணன், ஜெகன், சின்னழகு, ஹரி, கமல், ஜெகதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post பாஜ கொடியேற்று விழா appeared first on Dinakaran.

Tags : BJP ,Kaduur ,Modi ,Ramiyanaalli ,Tenkaraikottai Road ,Kaduur Eastern Union BJP ,Chitrarasu ,Dinakaran ,
× RELATED நவ. 25 முதல் இன்று வரை ஓயாத போராட்டம்;...