×

தவறான சிகிச்சை; மாணவன் பலி போலி பெண் மருத்துவர் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், பொம்மிக்குப்பம் சின்ன மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மகன் கவியரசு (9). 5ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 17ம் தேதி கவியரசுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, மாணவனை அங்கு கிளினிக் நடத்தி வந்த பெண் மருத்துவர் நந்தனியிடம் பெற்றோர் அழைத்து சென்றனர். அவர் மாணவருக்கு ஊசி போட்டுள்ளார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. இதையடுத்து தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றி பரிசோதித்தபோது டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலன்றி கவியரசு உயிரிழந்தார். போலி மருத்துவர் நந்தினியை (28) தவறான சிகிச்சை அளித்ததால் மாணவன் இறந்தது தெரிந்தது. இதையடுத்து நந்தினியை போலீசார் கைது செய்தனர்.

The post தவறான சிகிச்சை; மாணவன் பலி போலி பெண் மருத்துவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupathur ,Udayakumar ,Chinna Mariamman Koil Street, Bommikuppam, Tirupathur district ,Kaviarasu ,Kaviaras ,
× RELATED கே.சி.வீரமணி இன்று திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகிறார்..!!