×
Saravana Stores

நீதிபதிகள் தங்கள் மத நம்பிக்கையை பொதுவெளியில் காட்டக் கூடாது: உச்ச நீதிமன்ற நீதிபதி ஹிமா கோலி கருத்து

டெல்லி: பொதுவாக நீதிபதிகள் தங்கள் மத நம்பிக்கையை பொதுவெளியில் காட்டக் கூடாது என உச்சநீதிமன்ற நீதிபதி ஹிமா கோலி கருத்து தெரிவித்துள்ளார். இறை நம்பிக்கையும், ஆன்மிகமும் மதத்தில் இருந்து வேறுபட்டவை. மதம் என்பது தனிப்பட்ட விஷயம், அது 4 சுவர்களுக்குள்தான் இருக்க வேண்டும். நீதித்துறைக்கு வந்த பிறகு அரசியல் சாசனம்தான் மதம். மதச்சார்பற்ற இறையாண்மை கூடிய ஜனநாயகத்தைதான் அது முன்னிறுத்துகிறது. அதைதான் நாம் பொதுவெளியில் பிரதிபலிக்க வேண்டும். நீதிபதியின் தனிப்பட்ட மத நம்பிக்கை, அவர் நீதி வழங்குதலில் குறுக்கிடலாம் என்ற அச்சம் மக்களிடம் வந்துவிடக்கூடாது. மத நிகழ்வுகளில் நீதிபதிகள் பங்கேற்பது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி ஹிமா கோலி கருத்து தெரிவித்தார்.

The post நீதிபதிகள் தங்கள் மத நம்பிக்கையை பொதுவெளியில் காட்டக் கூடாது: உச்ச நீதிமன்ற நீதிபதி ஹிமா கோலி கருத்து appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Justice ,Hima Kohli ,Delhi ,
× RELATED அரசு வேலைக்கான பணிநியமன விதிகளை...