மதுரை, செப். 19: மதுரை மாவட்டத்தில் பெயர் பதிவு செய்துள்ள அனைவருக்கும் ஊரக வேலை வழங்கக்கோரி, ஒன்றிய அரசுக்கு எதிராக கிராமப்புற தொழிலாளர் சங்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை கலெக்டர் அலவலகம் அருகே அனைவருக்கும் 100 நாள் வேலை கேட்டு அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றோர் ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், காண்ட்ராக்ட் அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் ஒப்பந்ததாரர் பணிகளை படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வழங்கி, அவர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலகம் வாயிலாக சம்பளம் வழங்க வேண்டும். ஊரக வேலை திட்டத்திற்கு ஒன்றிய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தற்போது ஒதுக்கீடு செய்யும் குறைவான தொகையை, ஒப்பந்ததாரர்கள் எடுத்துக்கொள்ள அனுமதிக்க மாட்டோம். ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
The post ஒன்றிய அரசுக்கு எதிராக கிராமப்புற தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.