- ஆந்திரப் பிரதேசம்
- திருமலா
- ஏ.ஆனந்த லட்சுமி
- ஏ. கோட்டப்பள்ளி
- தொண்டங்கி மண்டல், காக்கிநாடா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
- காக்கிநாடா அரசு மருத்துவமனை
திருமலை: ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் தொண்டங்கி மண்டலம், ஏ.கோட்டப்பள்ளியைச் சேர்ந்த ஏ.அனந்த லட்சுமி(55). இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். காக்கிநாடா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதித்ததில் மூளையின் இடது பக்கத்தில் 3.3×2.7 செ.மீ கட்டி இருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து மருத்துவமனை டாக்டர்கள் கட்டியை அகற்ற முடிவு செய்தனர். இதற்காக நேற்றுமுன்தினம் குறைந்த மயக்கத்தில் அனந்தலட்சுமி விழித்திருக்கும் போது அறுவை சிகிச்சை மூலம் மூளையில் உள்ள கட்டியை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
அதன்படி அனந்தலட்சுமிக்கு மிகவும் பிடித்த ஜூனியர் என்.டி.ஆர்., காமெடி நடிகர் பிரம்மானந்தம் இணைந்து நடித்த ‘அதுர்ஸ்’ படத்தை டேபில் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த போது, வலி தெரியாமல் நரம்பியல் அறுவை சிகிச்சை மூத்த மருத்துவர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்களின் மேற்பார்வையில் 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக கட்டி அகற்றப்பட்டது. அதன் பிறகு அனந்த லட்சுமி காலை உணவை சாப்பிட்டார். அரசு மருத்துவமனையில் முதல்முறையாக இதுபோன்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
The post சினிமா பார்த்தபடி இருந்த பெண்ணுக்கு மூளையில் ஆபரேஷன்: ஆந்திராவில் அரசு மருத்துவர்கள் சாதனை appeared first on Dinakaran.