சென்னை: வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில் திருவள்ளுவர் பிறந்தார் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என திருவள்ளுவர் பிறந்தநாள் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. திருவள்ளுவரை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் தை 2ம் நாள் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதே சமயம் வைகாசி மாதத்தில் அனுஷ நட்சத்திரம் வரும் நாளை திருவள்ளுவர் பிறந்தநாளாக ஒரு சிலர் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் திருவள்ளுவர் பிறந்தநாளை வைகாசி மாதத்தில் அனுஷ நட்சத்திர தினத்தில் கொண்டாட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என திருவள்ளுவர் திருநாள் கழகத்தின் தலைவர் பேராசிரியர் சாமி தியாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் தான் திருவள்ளுவர் பிறந்தார் என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. ஆகவே, அந்த தினத்தை திருவள்ளுவர் பிறந்தநாளாக அறிவிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட முடியாது. திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தை 2ம் நாள் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறதே தவிர அது பிறந்த நாளாக அறிவிக்கப்பட வில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.
மேலும், வள்ளுவரை போற்றும் வகையில் தை 2-ல் வள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறதே தவிர, வள்ளுவர் பிறந்தநாளாக வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தை திருவள்ளுவர் பிறந்த தினமாக கொண்டாட எந்த தடையும் இல்லை என்று தெரிவித்தது. அத்துடன், திருவள்ளுவர் திருநாள் கழகத் தலைவர் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே சமயம் வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் திருவள்ளுவர் பிறந்தநாளை கொண்டாட மனுதாரருக்கு எவ்வித தடையும் இல்லை” என்று தெரிவித்தது. அத்துடன், திருவள்ளுவர் திருநாள் கழகத் தலைவர் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்றம்.
The post திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!! appeared first on Dinakaran.