- பாலாஜி என்கவுண்டர்
- புலியந்தோப்பு, சென்னை
- சென்னை
- ராவுடி காக தோபு பாலாஜி
- காகா தோபு பாலாஜி
- சென்னை புலியந்தோப்
- ரௌடி
- என்கவுண்டர்
சென்னை: சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டரில் போலீசார் சுட்டுக்கொன்றனர். சென்னை புளியந்தோப்பை சேர்ந்த ரவுடியான காக்கா தோப்பு பாலாஜி மீது கொலை, கொலை முயற்சி உட்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சென்னையின் பிரபல தாதாக்களில் ஒருவர் காக்கா தோப்பு பாலாஜி (39). 1990களில் சாதாரணமாக சிறு சிறு அடிதடிகளில் ஈடுபட்ட பாலாஜி, பின்னர் வியாசர்பாடி நாகேந்திரன் தொடர்பால் தொடர் கொலைகள், ஆட்கடத்தல், கொலை முயற்சி போன்ற வழக்குகளால் பிரபலமானார்.
காக்கா தோப்பு பாலாஜி சென்னை பிராட்வே, பி.ஆர்.என் கார்டன் பகுதியில் பிறந்தவர்
காக்கா தோப்பு பகுதியில் ரவுடிகளாக வலம்வந்த யுவராஜ், இன்பராஜ் உடன் நட்பு
மூலகொத்தளத்தைச் சேர்ந்த ரவுடியின் அண்ணன் புஷ்பா கொலை தான் காக்கா பாலாஜிக்கு முதல் கொலை என்று கூறப்படுகிறது
யார் பெரியவன் என்ற போட்டியில் கூட்டாளி யுவராஜை கொன்ற பாலாஜி, அதன்பின் காக்கா தோப்பு பாலாஜி என்ற அடைமொழியுடன் சுற்றிவந்தார். வடசென்னையை தன்வசம் கொண்டு வர நினைத்த காக்கா தோப்பு பாலாஜி அதற்கு தடையாக இருந்த ரவுடிகளை எல்லாம் கொலை செய்தார்
செம்மரக் கடத்தலிலும் ஈடுபட்டு வந்தார் காக்கா தோப்பு பாலாஜி காக்கா தோப்பு பாலாஜி மீது 25 கொலை வழக்குகள், அடிதடி, மிரட்டல், ஆட்கடத்தல் என 59 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடுத்துள்ள ஏழு கிணறு பகுதியில் உள்ள காக்கா தோப்பு என்கிற பகுதியில் பிறந்து வளர்ந்ததால் சக ரவுடிகளால் காக்கா தோப்பு பாலாஜி என அழைக்கப்பட்டு, போலீஸ் ரெக்கார்டிலும் காக்கா தோப்பு பாலாஜி ஆனார். ரவுடிகளுக்கு இடையே நடந்த கொலைகள், கூலிப்படைகளை ஏவிக் கொல்லுதல் போன்ற காரியங்களால் சென்னையின் பல காவல் நிலையங்களில் காக்கா தோப்பு பாலாஜி மீது பல வழக்குகள் உள்ளன.
ஒரு கட்டத்தில் சிறையே வாழ்க்கையாகிப்போன பாலாஜி சிறைக்குள் இருந்தே ஸ்கெட்ச் போட்டு வெளியில் கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்டுகளுக்கு ஏற்ப கூலிப்படைகளை ஏவிக் கொலை செய்துவந்ததும் தெரியவந்தது. இடையில் செம்மரக் கடத்தலிலும் ஈடுபட்டதால் பணம் கொட்ட ஆரம்பித்தது. அடிக்கடி போலீஸ் கைது சிறைவாசம் என்றாலும் வெளியில் வந்தபின் தலைமறைவாகி தனது வேலையைத் தொடர்வது வாடிக்கையாக இருந்தது.
சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் இவருக்கு தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. பல குற்றங்களைச் செய்த காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் நீண்ட நாட்களாக தேடிவந்தனர்.
இந்நிலையில் வியாசர்பாடி ரயில் நிலையம் அருகேயுள்ள BSNL குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த காக்கா தோப்பு பாலாஜியை, போலீசார் கைது செய்ய சென்றபோது, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து போலீசார் அவரை என்கவுன்ட்டரில் சுட்டுள்ளனர். காக்கா தோப்பு பாலாஜியை கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் சுட்டுக்கொன்றார். காலை 4.50 மணிக்கு காக்கா தோப்பு பாலாஜியை வியாசர்பாடி P&T குடியிருப்பு பகுதியில் ஆய்வாளர் சரவணன் சுட்டுக்கொன்றார்
சம்பவ இடத்திலேயே காக்கா தோப்பு பாலாஜி உயிரிழந்திருக்கிறார். அவரது உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் உடல் சென்னை ராயப்பேட்டை சவக்கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டது. ராயப்பேட்டை துணை ஆணையர் இளங்கோவன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
The post சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.