ராமநாதபுரம், செப்.18: ராமநாதபுரம், கடலாடி, சாயல்குடி, முதுகுளத்தூர் மற்றும் கமுதி பகுதி ஐயப்பன் கோயில்களில் புரட்டாசி மாதம் முதல் நாள் பூஜை நேற்று நடந்தது. ஐயப்பன் கோயில்கள் தமிழ் மாதம் முதல் நாள் மாதாந்திர சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. அதன்படி புரட்டாசி மாதம் முதல் நாளான நேற்று ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து ஐயப்பன் கோயில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரம் வல்லப்பை ஐயப்பன் கோயிலில் மூலவருக்கு சந்தனம், விபூதி,பால், நெய் உள்ளிட்ட 18 வகை அபிஷேகம் மற்றும் இரவில் படி பூஜை நடந்தது. கடலாடி சார்பதிவாளர் அலுவலகம் அருகிலுள்ள ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஐயப்பனுக்கு சிறப்பு மலர் அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது.
இதுபோன்று அரசு மேல்நிலைப்பள்ளி அருகிலுள்ள தர்மசாஸ்தா கோயிலில் மூலவருக்கு நெய், பால், இளநீர் உள்ளிட்ட அபிஷேகத்துடன் படையல் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. முதுகுளத்தூர் சுப்ரமணியர் கோயிலுள்ள ஐயப்பன் மற்றும் மின்சார வாரியம் அலுவலகம் அருகிலுள்ள ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் காட்டுபிள்ளையார் கோயில் அருகே உள்ள ஐயப்பன் கோயில், சாயல்குடி பேரூராட்சி அலுவலகம் அருகிலுள்ள ஐயப்பன், சிவன் கோயிலுள்ள ஐயப்பன், சிக்கல் ஊரணி கரையிலுள்ள ஐயப்பன், கமுதி கோட்டைமேடு ஐயப்பன், அபிராமம் அச்சங்கோயில் ஐயப்பன் கோயில்களில் நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு நெய் அபிஷேகம் உள்ளிட்ட அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடந்தது. இந்நிகழ்ச்சிகளில் ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post ஐயப்பன் கோயில்களில் மாதாந்திர சிறப்பு பூஜை appeared first on Dinakaran.