சென்னை: மதுரை எம்பி வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை : மதுரை எய்ம்ஸ் குறித்து, பாஜ தலைவர்கள் இங்கொன்றும், அங்கொன்றும் பேசுவதை எடுத்து கொள்ள முடியாது. ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறுவதை மட்டுமே எடுத்து கொள்ள முடியும். மதுரை எய்ம்ஸ்சுக்கு எத்தனை முறை தான் ஒப்பந்தபுள்ளியில் கோளாறு வரும். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டுமான பணிக்கு எப்படி கோளாறு வருகிறது. இது தொடர்ச்சியாக, நமக்கான பங்கை மறுக்கும் வேலை.இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post மதுரை எய்ம்ஸ்சுக்கு மட்டும் எப்படி கோளாறு வருகிறது? எம்பி கேள்வி appeared first on Dinakaran.