- ஐரோப்பிய ஒன்றிய
- சென்னை
- தமிழ் மாநில காங்கிரஸ்
- ஜனாதிபதி
- ஜி. வாசன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ராமேஸ்வரம் துறைமுகம்
- இலங்கை கடற்படை
- கே. வாசன்
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை :
ஒன்றிய, மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 23 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்களின் 3 படகுகளையும் பறிமுதல் செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது. உடனடியாக மீனவர்களை மீட்க அவர்களது குடும்பங்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஒன்றிய அரசு தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழிலுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கையை முறியடிக்க வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழில் இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
The post இலங்கை கடற்படையால் மீனவர்கள் பாதிப்பு; ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.