×

தூத்துக்குடி விமான நிலையத்தில் ஒன்றிய அமைச்சருக்கு பாஜவினர் வரவேற்பு

தூத்துக்குடி, செப். 18: தூத்துக்குடிக்கு வருகைதந்த ஒன்றிய அமைச்சர்களுக்கு பாஜவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சர்வதேச சரக்கு பெட்டக முனையத்தை திறந்து வைப்பதற்காக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்த ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள்துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால், ஒன்றிய இணையமைச்சர் சாந்தனு தாக்கூர் ஆகியோரை தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜ தலைவர் சித்ராங்கதன் தலைமையில் நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர்.இதில் மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா, ஓபிசி அணி மாநில துணைத்தலைவர் விவேகம் ரமேஷ், மாவட்ட பொதுச்செயலாலர்கள் ராஜா, சத்தியசீலன், மாவட்ட துணை தலைவர்கள் சிவராமன், சுவைதார், மாவட்டச் செயலாளர்கள் வீரமணி, கனல்ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், மண்டல தலைவர்கள் ராஜேஷ் கனி, மாதவன், நவமணிகண்டன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post தூத்துக்குடி விமான நிலையத்தில் ஒன்றிய அமைச்சருக்கு பாஜவினர் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Union Minister ,BJP ,Tuticorin Airport ,Thoothukudi ,Union Ministers ,Dinakaran ,
× RELATED ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: கிரண் ரிஜிஜு