×

வீடு புகுந்து செயின் திருட்டு

தாம்பரம்: சேலையூர், ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் மலர் (40). இவர், நேற்று காலை வழக்கம் போல வேலைக்கு சென்ற நிலையில் மதியம் அவரது மகன் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்துள்ளார். பின்னர் கழிவறை செல்வதற்காக வீட்டின் உள்ளே சென்ற போது வீட்டிற்குள் யாரோ இருப்பதை கண்ட அவர் உடனடியாக வெளியே ஓடி வந்து அக்கம்பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்ப்பதற்குள் மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். பின்னர் மலர் வேலை முடிந்து, மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த ஒன்றரை சவரன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து சேலையூர் காவல் நிலையத்தில் அவர் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

The post வீடு புகுந்து செயின் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Thambaram ,Rajaji Nagar, Selaiyur ,
× RELATED தாம்பரம்-திருச்சி இண்டர்சிட்டி ரயில் நிறுத்தம்: பயணிகள் அதிர்ச்சி