×
Saravana Stores

முதலமைச்சர் கோப்பைக்கான பள்ளி மாணவர்களுக்கு மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடங்கியது

*கல்லூரி மாணவர்களுக்கு நாளை நடக்கிறது

வேலூர் : முதலமைச்சர் கோப்பைக்கான பள்ளி மாணவர்களுக்கு மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. தொடர்ந்து, கல்லூரி மாணவர்களுக்கு நாளை நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பின்படி கடந்தாண்டு முதல் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தேசிய அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு இணையாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்தாண்டு மாவட்ட அளவிலான போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து, திருவண்ணாமலை மண்டலம் கீழ் இயங்கி வரும் வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தர்மபுரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களின் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மண்டல அளவில் போட்டிகள் நேற்று தொடங்கியது.

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தமிழ்நாடு மாநில முதன்மை நிலை பளு தூக்கும் மையத்தில் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 9 மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு இடையேயான பளு தூக்கும் போட்டிகள் நேற்று நடந்தது.இந்த போட்டியை காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற சதீஷ்சிவலிங்கம் தொடங்கி வைத்தார்.

8 பிரிவுகளில் மாணவ, மாணவிகள் தனித்தனியாக பங்கேற்றனர். இதில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள். காட்பாடி விளையாட்டு மைதானத்தில் மாணவ, மாணவிகளுக்கு மண்டல அளவிலான ஜூடோ போட்டிகள் நேற்று நடந்தது. அதேபோல் கபடி, கோகோ உள்ளிட்ட போட்டிகளும் நடந்தது. இதில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் ெவற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

கல்லூரி மாணவர்கள் இடையேயான பளுதூக்கும் போட்டி நாளை தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பயிற்சியாளர்கள் விநாயகமூர்த்தி, சாந்தி ஆகியோர் செய்துள்ளனர்.
மேலும் கல்லூரி மாணவர்களுக்கான மண்டல அளிவலான விளையாட்டு போட்டிகள் நாளை தொடங்க உள்ளது.

The post முதலமைச்சர் கோப்பைக்கான பள்ளி மாணவர்களுக்கு மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Vellore ,Chief Minister's Cup ,Tamil Nadu ,Chief Minister ,
× RELATED முதலமைச்சர் கோப்பை போட்டியில்...