×

கல்லூரி மாணவி மாயம்

 

கண்டமங்கலம், செப். 17: கண்டமங்கலம் அருகே உள்ள வழுதாவூர் பகுதியை சேர்ந்தவர் இளவரசன் மகள் ஜெயஸ்ரீ (19). இவர் வானூர் பகுதியில் உள்ள கலை கல்லூரியில் பி.ஏ தமிழ் இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவருக்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 12ம் தேதி காலை 8 மணிக்கு வீட்டில் இருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களிலும், உறவினர்கள் வீடுகளிலும், தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தாய் மீனாட்சி கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகிறார்.

The post கல்லூரி மாணவி மாயம் appeared first on Dinakaran.

Tags : Mayam ,Kandamangalam ,Jayashree ,Valhuthavoor ,Vanur ,
× RELATED மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மாயம்