×
Saravana Stores

கட்டிடத்துக்கு அனுமதி வழங்காததால் பழங்குடியின மாணவர்களுக்கு கன்டெய்னரில் பள்ளி: தெலங்கானாவில் புதுமை

திருமலை: தெலங்கானாவில் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு வனத்துறை அனுமதி வழங்காததால், பழங்குடியின மாணவர்களுக்கு கலெக்டர் ஒருவர் புதுமையான முறையில் கன்டெய்னரில் பள்ளி அமைத்து அசத்தி உள்ளார். தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் கன்னாயகூடம் மண்டலம் பங்காருபள்ளி கோத்திகோயகும்பு வனப்பகுதியில் பழங்குடியினத்தவர் கிராமம் உள்ளது. இங்குள்ளவர்களின் பிள்ளைகள் பள்ளி செல்ல வேண்டுமென்றால், பல கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும். இதனால் கிராமத்திலேயே நிரந்தர பள்ளி கட்டிடங்களை அமைக்க அரசு முன்வந்தாலும், புதிய கட்டிடம் கட்ட வனத்துறையினர் அனுமதி வழங்கவில்லை. இதனால் கலெக்டர் திவாகர் புதுமையாக ஆலோசித்து முதன்முறையாக கன்டெய்னர் பள்ளியை துவக்கி வைத்தார். இதற்காக கலெக்டர் நிதியில் இருந்து ரூ.13 லட்சத்தில் 12 இரட்டை மேசைகளுடன் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அமர்வதற்கு 3 நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கன்டெய்னர் 25 அடி அகலமும் 25 அடி நீளமும் கொண்டதாகும். இதனால் அந்த கிராமத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post கட்டிடத்துக்கு அனுமதி வழங்காததால் பழங்குடியின மாணவர்களுக்கு கன்டெய்னரில் பள்ளி: தெலங்கானாவில் புதுமை appeared first on Dinakaran.

Tags : Telangana ,Tirumala ,Telangana State Muluku District ,Kannayakoodam Mandal Bangarupalli Kothikoyakumbu forest ,
× RELATED தெலங்கானாவில் பார்மா நிறுவனத்திற்கு...