×

விடுதலைக்காகவும், சமூக உரிமைகளுக்காக பாடுபட்டவர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: நாட்டு விடுதலைக்காகவும், சமூக உரிமைகளுக்காகவும் பாடுபட்ட எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாள் செப்டம்பர் 16. அண்ணாவோடும், கலைஞரோடும் நெருங்கிப் பழகியவர் அவர். அவரது வாழ்வைப் போற்றி கிண்டி, ஹால்டா சந்திப்பில் கலைஞர் அமைத்த சிலைக்கு மலர் வணக்கம் செலுத்தினோம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைக் குரல் எழுப்பிய எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் பணிகளை நினைவு கூர்ந்து போற்றுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post விடுதலைக்காகவும், சமூக உரிமைகளுக்காக பாடுபட்டவர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : S.S. ,Ramasamy Padayatshiar ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,M.K.Stalin ,Ramasamy Padayatshiyar ,Anna ,Halda ,Guindy ,S.S. Ramasamy Padayatshiar ,
× RELATED மேல்மலையனூர் அங்காளம்மன்...