×

சங்கரன்கோவில் நகராட்சியில் சமூகநீதிநாள் உறுதிமொழி ஏற்பு

சங்கரன்கோவில், செப்.17: சங்கரன்கோவில் நகராட்சியில் சேர்மன் உமாமகேஸ்வரி தலைமையில் கமிஷனர் சபாநாயகம் முன்னிலையில் அனைத்து அலுவலர்கள் சமூக நீதிநாள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சங்கரன்கோவில் நகராட்சியில் சமூக நீதிநாள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். கமிஷனர் சபாநாயகம் முன்னிலை வகித்தார். இதைத்தொடர்ந்து இதில் பங்கேற்ற நகராட்சி சுகாதார அலுவலர் வெங்கட்ராமன், கணக்காளர் பாலசுப்பிரமணியன், ஆர்ஐ முருகன், சுகாதார ஆய்வாளர்கள் கருப்பசாமி, கைலாசம், திமுக இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சரவணன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் சமூக நீதிநாள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.

The post சங்கரன்கோவில் நகராட்சியில் சமூகநீதிநாள் உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Community Justice Day ,Sankarankoil Municipality ,Sankarankovil ,Social Justice Day ,Commissioner's House ,Umamakeshwari ,Periyar ,justice ,Sankarankovil Municipality.… ,Sankarankovil Municipality ,Dinakaran ,
× RELATED மல்லிகைப்பூ கிலோ ரூ.7,500க்கு விற்பனை : வியாபாரிகள் மகிழ்ச்சி