கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜூனியர் மருத்துவர்கள் பேச்சுவார்த்தை வரும்படி அம்மாநில அரசு கடைசி அழைப்பு விடுத்துள்ளது. மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டும், பணி இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் ஜூனியர் மருத்துவர்கள் தொடர் நடத்தி வருகின்றனர். அவர்கள் செப்டம்பர் 9ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப உச்சநீதிமன்றம் கேடு விதித்திருந்தது. ஆனால் அதனை பொருட்படுத்தாத மருத்துவர்கள் அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு ஏற்கனவே பலமுறை அழைப்பு விடுத்திருந்த நிலையில், இன்று 5வது முறையாக இறுதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணியளவில் மம்தா பானர்ஜி இல்லத்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தை நேரலை செய்யப்பட்டது என்று மருத்துவர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தலைமை செயலர் மனோஜ் பந்த் தெரிவித்துள்ளார். கடந்த முறை நடந்த பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாகவே இது இருக்கும் என்றும், உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி போராட்டத்தை கைவிட்டு மருத்துவர்கள் விரைந்து பணிக்கு திரும்பவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
The post நாட்டை உலுக்கிய கொல்கத்தா மருத்துவர் கொலை விவகாரம்: 5வது மற்றும் கடைசி பேச்சுவார்த்தைக்கு மம்தா அரசு அழைப்பு!! appeared first on Dinakaran.