×

காஷ்மீரில் மேய்ச்சலுக்கு சென்றவர்களை கடத்திச் சென்று பயங்கரவாதிகள் கொலை : கிராம பாதுகாப்புக் குழுவுக்கு இது பாடமாக இருக்கட்டும் என எச்சரித்து கடிதம்!!

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கிராம பாதுகாவலர்கள் 2 பேரை தீவிரவாதிகள் கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர்.கிஸ்துவார் மாவட்டத்தில் உள்ள ஒஹ்லி குன்ட்வாரா கிராம பாதுகாவலர்களான நஷிர் அகமது மற்றும் குல்தீப் குமார் ஆகிய 2 பேரை தீவிரவாதிகள் கொன்றனர். இருவரும் வழக்கம் போல கால்நடைகளை மேய்ப்பதற்காக வனப்பகுதிக்கு சென்று இருந்த போது, பயங்கரவாதிகள் கடத்தி சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அவர்கள் உடல்களுக்கு அருகில் உருது மொழியில் எழுதப்பட்ட கடிதம் ஒன்று இருந்ததாகவும் அதில் கொலைக்கு பொறுப்பேற்பதாக ஜெய்ஷ்-இ -முகமது பயங்கரவாத இயக்கத்தின் கிளையான காஷ்மீர் டைகர்ஸ் என குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்திய ராணுவத்தினர் மட்டுமே தங்கள் இலக்கு என்றும் பொது மக்களை இதுவரை கொன்றதில்லை என குறிப்பிட்டுள்ள அந்த கடிதத்தில், வனப்பகுதியில் தங்களை விடாமல் துரத்தியதாலயே சிறைபிடித்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம பாதுகாப்பு குழுவில் இணைபவர்களுக்கு இது பாடமாக இருக்கட்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, கிராமப் பாதுகாவலர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு துணைநிலை கவர்னர் சின்ஹா, முதல்வர் ஒமர் அப்துல்லா மற்றும் காங்கிரஸ், பா.ஜ.,வினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

The post காஷ்மீரில் மேய்ச்சலுக்கு சென்றவர்களை கடத்திச் சென்று பயங்கரவாதிகள் கொலை : கிராம பாதுகாப்புக் குழுவுக்கு இது பாடமாக இருக்கட்டும் என எச்சரித்து கடிதம்!! appeared first on Dinakaran.

Tags : Srinagar ,Jammu and ,Kashmir ,Nashir Ahmed ,Kuldeep Kumar ,Ohli Kundwara ,Kishwar district ,Dinakaran ,
× RELATED ஜம்மு காஷ்மீரில் சக காவலரை சுட்டு கொன்று ஏட்டு தற்கொலை