×
Saravana Stores

சட்டப்பிரிவு 370 நீக்கிய பிறகும் காஷ்மீரில் தீவிரவாதம் நீடிக்க காரணம் என்ன? பரூக் அப்துல்லா கேள்வி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்ட பேரவை தேர்தலையொட்டி, ஸ்ரீநகர் அருகே உள்ள கந்தர்பால் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சி துணை தலைவருமான உமர் அப்துல்லாவை ஆதரித்து கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா நேற்று பிரசாரம் செய்த போது, ‘‘காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி கூட்டணிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மோடி கூறுகிறார். நீங்கள் மக்களை தவறாக வழிநடத்துகிறீர்கள்.

நீங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பொய்யை சொல்கிறீர்கள். அரசியல் சட்டம் 370வது பிரிவு நீக்கப்பட்ட பின்னர் கடந்த 5 ஆண்டுகளாக பாஜ தான் ஆட்சியில் உள்ளது. 370வது பிரிவுதான் தீவிரவாதம் உருவாவதற்கு காரணம் என்று கூறினீர்கள். 370வது பிரிவு இப்போது இல்லை. பின்னர் தீவிரவாதம் எப்படி வருகிறது. மக்களை கொன்று வீரர்களை வீரமரணம் அடைய செய்ய துப்பாக்கிகள் எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது. இதற்கு மோடி பதில் சொல்ல வேண்டும்’’ என்றார்.

The post சட்டப்பிரிவு 370 நீக்கிய பிறகும் காஷ்மீரில் தீவிரவாதம் நீடிக்க காரணம் என்ன? பரூக் அப்துல்லா கேள்வி appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Barack Abdullah ,Srinagar ,Bharuk Abdallah ,National Convention Party ,Umar Abdullah ,Kandarpal ,Jammu and Kashmir Law Council ,Baruk Abdullah ,Dinakaran ,
× RELATED காஷ்மீர் பேரவையில் அமளியில் ஈடுபட்ட...