×

அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் விழிப்புணர்வு முகாம்

காரைக்குடி, செப். 14: காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் வருமான வரித்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இயற்பியல் துறைத்தலைவர் சுப்பு வரவேற்றார். கல்லூரி முதல்வர் (பொ) கோமளவல்லி தலைமை வகித்தார். வருமானவரி அதிகாரிகள் வனிதா, சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மதுரை வருமானவரித் துறை இணை ஆணையர் சாந்தசொரூபன் துவக்கி வைத்து பேசுகையில், மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே வருமானவரியின் செலுத்துவதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளவே எங்கள் துறையின் சார்பில் இதுபோன்ற விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. நாம் செலுத்தும் வரி நாட்டின் வளர்ச்சிக்கும், அரசின் திட்டங்களுக்கு உதவியாக இருக்கும், என்றார்.

வருமானவரி அதிகாரி சுப்பிரமணி பேசுகையில், வருமானம் உள்ளவர்களுக்கு தான் வரி விதிக்கப்படுகிறது. நடுத்தரமக்களுக்கு குறைந்த விகிதத்தில் வரி விதிக்கப்படுகிறது. பெறப்படும் வரி ஏழை மக்களின் வாழ்க்கை தரம் உயர பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த பயன்படுத்தப்படுகிறது, என்றார். கல்லூரியின் பல்வேறு துறைகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். வருமான வரி ஆய்வாளர் பத்மாவதி நன்றி கூறினார்.

The post அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Alagappa Government Arts College ,Karaikudi ,Income Tax Department ,Head ,Komalavalli ,Vanitha ,Subramanian ,Dinakaran ,
× RELATED ஊழல் முறைகேடு நிறைந்தது எடப்பாடி...