×

மாவட்ட அளவிலான கலை போட்டிகள்

ராமநாதபுரம், செப்.18:ராமநாதபுரத்தில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலை போட்டிகள் நடந்தது. மதுரை தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை மற்றும் ராமநாதபுரம் ஜவகர் சிறுவர் மன்றம் சார்பாக நேற்று மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நடந்தது. ராமநாதபுரம் டி.டி விநாயகர் தொடக்கப் பள்ளியில் நடந்த மாவட்ட அளவிலான போட்டியில் 5 முதல் 8 வயது, 9 வயது முதல் 12 வயது, 13 வயது முதல் 16 வயது என 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.

மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வந்திருந்த மாணவ,மாணவியர் பரதநாட்டியம், ஓவியம், நாட்டுப்புற பாடல், கிராமிய நடனம் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு அசத்தினர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட திட்ட அலுவலர் ராஜூ, டிடி விநாயகர் பள்ளி தாளாளர் அபர்ணா, ஆசிரியர்கள் முனீஸ்வரி, அனந்த முத்துமாரி, பாலாஜி ஆகாஷ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post மாவட்ட அளவிலான கலை போட்டிகள் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Madurai Tamil Nadu Government Art and Culture Department ,Ramanathapuram Javakar Children's Club ,DD Vinayakar ,
× RELATED ராமநாதபுரம் அரண்மனை வீதியில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிப்பு