×

தேனியில் வாலிபர் சடலமாக மீட்பு

தேனி, செப்.18: தேனி அல்லிநகரம் கிணற்றுத் தெருவைச் சேர்ந்தவர் மகேஷ்(45). இவரது மனைவி கீதா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகேஷூக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக மகேஷை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்று, விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். இதனால் மனமுடைந்த அவர், கடந்த ஆகஸ்டில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பியநிலையில், நேற்று முன்தினம், அல்லிநகரம் நகராட்சி ஆரம்பப் பள்ளி அருகே அவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனயடுத்து அவரது உடலை, போலீசார் கைப்பற்றி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது தந்தை ராமசாமி அளித்த புகாரின்பேரில் அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தேனியில் வாலிபர் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Theni ,Mahesh ,Theni Allinagar Well Street ,Geeta ,Maheshu ,
× RELATED போதைப்பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை: தேனி கலெக்டர் எச்சரிக்கை