×

புரட்டாசி முதல் நாளில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை

தொண்டி,செப்.18:தொண்டி உந்தி பூத்த பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். புரட்டாசி முதல் நாளை முன்னிட்டு நேற்று தொண்டி தேவி, பூ மாதேவி சமேத உந்தி பூத்த பெருமாள் கோயிலில் உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக பால், பன்னீர், சந்தனம், பழங்கள் உள்ளிட்ட 12 வகை அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

The post புரட்டாசி முதல் நாளில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை appeared first on Dinakaran.

Tags : Perumal ,Puratasi ,Thondi ,Thondi Undi Bhutta Perumal Temple ,Poo ,
× RELATED சிறுநாகலூர் கிராமத்தில் சீனிவாச...