- பிறகு நான்
- தேனி மாவட்ட கலெக்டர்
- முத்தாலம்பாறை ஊராட்சி
- தேனி மாவட்டம்
- மெய்வாரி சட்ட மையம்
- மக்கள் இயக்க மாவட்டம்
- ஜனாதிபதி
- செல்வலட்சுமி தேனி
- தின மலர்
தேனி, செப். 14: தேனி மாவட்டம் முத்தாலம்பாறை ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி தேனி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மெய்வழி சட்ட மையம் மற்றும் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் செல்வலட்சுமி தலைமையில் நிர்வாகிகள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் ஷஜீவனாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். இம்மனுவில் முத்தாலம்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட உப்புத்துறை, ஜே.ஜே.நகர் காலனி பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வாழ்வாதார தேவைகளாக உள்ள மேல்நிலைத் தொட்டி, ஆதார் கார்டு, ரேஷன் அட்டை, அங்கன்வாடி கட்டிடம், பொதுக்கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.
The post அடிப்படை வசதிகள் கோரி கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.