- 24 வது எதிர்ப்பு
- சென்னை
- எடப்பாடி பழனிசாமி
- பொது செயலாளர்
- படை
- காஞ்சிகுபம் கிராமம்
- பரகூர், கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம்
- எதிர்ப்பு
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவி தேசிய மாணவர் படை பயிற்சியாளர், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. அதேபோல், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே ஆலாங்கொம்பு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது என பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளன.
எனவே, பாலியல் வன்கொடுமைகளை தடுத்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக மகளிர் அணி சார்பில் செப்.24ம் தேதி காலை 9.30 மணியளவில் சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையிலும், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா முன்னிலையிலும் நடைபெறும். இதில், மகளிர் அணியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், இளம் பெண்கள் பாசறையை சேர்ந்த நிர்வாகிகளும், மகளிரும் திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பாலியல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னையில் வரும் 24ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.