×

கயத்தாறு அருகே மக்கள் தொடர்பு முன்னோடி முகாம்

கயத்தாறு, செப். 13: கயத்தாறு அருகேயுள்ள ஆசூர் தளவாய்புரம் கிராமத்தில் மாவட்ட கலெக்டரின் மக்கள் தொடர்பு முன்னோடி முகாம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர். முகாமில் கயத்தாறு தாசில்தார் சுந்தரராகவன், கயத்தாறு சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அறிவழகன், கயத்தாறு மண்டல துணை தாசில்தார் கோவிந்தராஜ், கடம்பூர் வருவாய் ஆய்வாளர் துரைச்சாமி, காமநாயக்கன்பட்டி வருவாய் ஆய்வாளர் செல்லப்பாண்டியன், ஆசூர் சவலப்பேரி கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி மற்றும் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post கயத்தாறு அருகே மக்கள் தொடர்பு முன்னோடி முகாம் appeared first on Dinakaran.

Tags : Public Relations Pioneer Camp ,Gayathur ,Public ,Relations ,Pioneer ,Camp ,Asur Thalavaipuram ,Gayatharu ,Tahsildar Sundararaghavan ,Public Relations ,Dinakaran ,
× RELATED கடம்பூர் ராஜூ எம்எல்ஏ முன்னிலையில்...