×

சிவகங்கை மாவட்டத்தில் குரூப் 2 தேர்வு எழுத 13,260 பேர் விண்ணப்பம்

சிவகங்கை, செப்.13: சிவகங்கை மாவட்டத்தில் நாளை(செப்.14) நடைபெறும் குரூப் 2தேர்வை எழுத 13ஆயிரத்து 260பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு நாளை நடைபெற உள்ளது. தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் காலை 9மணிக்கு ஹால் டிக்கெட் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையுடன் செல்ல வேண்டும். தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் இத்தேர்வை எழுத மொத்தம் 13ஆயிரத்து 260பேர் நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி ஆகிய 3 இடங்களில் சிவகங்கையில் 22, தேவகோட்டையில் 5, காரைக்குடியில் 16 மையங்களில் தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு கண்காணிப்பு பணியில் 14 நடமாடும் குழுக்கள், 5பறக்கும் படைகள் ஈடுபடுத்தப்பட உள்ளன. செல்போன், எலெக்ட்ரானிக் வாட்ச், புளுடூத், தகவல் தொடர்பு சாதனங்கள் கண்டிப்பாக எடுத்துச் செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post சிவகங்கை மாவட்டத்தில் குரூப் 2 தேர்வு எழுத 13,260 பேர் விண்ணப்பம் appeared first on Dinakaran.

Tags : Sivaganga district ,Sivagangai ,Sivagangai district ,Tamil Nadu Government Staff Selection Commission ,Dinakaran ,
× RELATED சிங்கம்புணரி -சிவபுரிபட்டியை இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு ..!!