×

சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை, செப்.13: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், தேவகோட்டை நகராட்சி மற்றும் சிங்கம்புணரி பேரூராட்சி பகுதியில் காலியாகவுள்ள தற்காலிக சமுதாய அமைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:சிவகங்கை மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் மூலம் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தேவகோட்டை நகராட்சி மற்றும் சிங்கம்புணரி பேரூராட்சி பகுதியில் சமுதாய அமைப்பாளர் பணியில் 2 இடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடத்திற்கு தேவகோட்டை நகராட்சி மற்றும் சிங்கம்புணரி பேரூராட்சி பகுதிகளைச் சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு திட்டங்களில் குறைந்தபட்சம் ஒரு வருடம் முன் அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் வருகின்ற செப்.17அன்று மாலை 5மணிக்குள் மேலாளர், சிவகங்கை நகர்புர வாழ்வாதார மையம், சிவகங்கை நகராட்சி என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சுய விபரம் அடங்கிய ஆவண நகல்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Tamil Nadu Urban Livelihood Movement ,Devakotta Municipality ,Singampunari Municipality ,Collector ,Asha Ajith ,Sivagangai District Operations Management Unit ,
× RELATED ஆறுகளில் குளிப்பவர்களுக்கு ‘அலார்ட்’