- சிவகங்கை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- நலன்புரி மற்றும்
- விளையாட்டு அபிவிருத்தி அமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- சிவகங்கை நகராட்சி
- துரை ஆனந்த்
- சிவகங்கை நகராட்சி
- தின மலர்
சிவகங்கை, செப். 12: தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், சிவகங்கை நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:சிவகங்கை வரலாற்று சிறப்பு மிக்க நகரமாகும். மாவட்ட தலைநகராக உள்ள சிவகங்கை நகராட்சி தற்போது முதல்நிலை நகராட்சியாக உள்ளது. நகராட்சியின் வருவாய் மற்றும் மக்கள் தொகை உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு நகராட்சியை சுற்றியுள்ள ஊராட்சிகளை இந்நகராட்சியுடன் இணைத்து தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த நிர்வாக அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதுள்ள நகராட்சி அலுவலக கட்டிடம் போதிய இட வசதி இல்லாமல் மக்கள் வந்து செல்வதற்கு ஏற்ற வகையில் இல்லாமல் ஒதுக்குபுறத்தில் உள்ளது. எனவே, புதிய நகராட்சி அலுவலக கட்டிடம் கட்ட நிர்வாக அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post சிவகங்கையை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தக்கோரி மனு appeared first on Dinakaran.