- தடைகளை
- சிவகங்கை
- சிவகங்கை கலெக்டர்
- தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை ஊழியர் சங்கம்
- சிவகங்கையில் சாலை மறியல்
- தின மலர்
சிவகங்கை, நவ.8: சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்குவது உள்ளிட்ட 32 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாநில பொதுச்செயலர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் மாயாண்டி முன்னிலை வகித்தார்.
கோரிக்கைகளை விளக்கி மாவட்டச்செயலர் திருஞானம் பேசினார். இதில் பொது விநியோகத் திட்டத்திற்கான தனித்துறை அமைப்பது. நியாயவிலைக் கடைப்பணியாளர்கள் அனைவருக்கும் 30 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். கடைகளுக்கு சரியான எடையில் தரமான பொருள்களை பொட்டலமாக வழங்க வேண்டும். பொதுமக்கள் கருத்து கேட்டு பொருட்களை வழங்குவது.
கல்வித்தகுதி அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும். எப்பிஎஸ் செயலி மூலம் ஆய்வு செய்வதைக் கைவிட வேண்டும். கட்டுப்பாடற்ற பொருள்களை கட்டுப்பாடு இல்லாமல் இறக்குவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 32 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டப் பொருளர் கௌரி நன்றி கூறினார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 28 பெண்கள் உள்பட மொத்தம் 58 பேரை போலீசார் கைது செய்தனர்.
The post சிவகங்கையில் சாலை மறியல் போராட்டம் appeared first on Dinakaran.