×

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நேற்று முன்தினம், ஒரு நாள் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 12 சங்கங்களை சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் நடைபெற்றது. இதனால், மாணவர்களின் கல்வி சம்பந்தப்பட்ட கற்றல், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டன. எனவே, தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களிடம் கால தாமதம் செய்யாமல் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளுக்கு சுமூகத் தீர்வு ஏற்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதிய முரண்பாடுகளை சரிசெய்தல் உள்ளிட்ட இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : GK Vasan ,Chennai ,Tamil State Congress ,President ,Tamil Nadu ,
× RELATED ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்