- முருகானந்தம்
- சென்னை
- பிரதம செயலாளர்
- முருகானந்தம்
- நகராட்சி நிர்வாக இயக்குநரகம்
- சாந்தோம், சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: இணையவழி சூதாட்டம், விளையாட்டு சமூகத்தில் தீய தாக்கங்களை ஏற்படுத்துவதாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார். சென்னை சாந்தோமில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குநரக கூட்ட அரங்கில் இணையவழி விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற இந்த பிரசாரத்தை தலைமைச் செயலாளர் முருகானந்தம் தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் பேசிய அவர்; இணையவழி சூதாட்டம், இணையவழி விளையாட்டு சமூகத்தில் தீய தாக்கங்களை ஏற்படுத்துவதாகவும், கொரோனா காலகட்டத்தில் இணையவழி சூதாட்டம், விளையாட்டுகள் இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் பரவியது என்றும், தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் இதனை ஒழுங்குபடுத்தி வருவதாக தெரிவித்தார். மேலும், திமுக அரசு இணையவழி சூதாட்ட விளையாட்டுகளை தடுக்க சட்டம் இயற்றியுள்ளதாக குறிப்பிட்ட அவர், இணையவழி சூதாட்டம் விளையாட்டு தொடர்பாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கண்காணிக்க வேண்டும் என்று கூறினார்.
The post இணையவழி சூதாட்டம்.. சமூகத்தில் தீய தாக்கங்களை ஏற்படுத்துகிறது; பெற்றோர்கள் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும்: முருகானந்தம் பேச்சு!! appeared first on Dinakaran.