×

முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சங்கர் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், 1966ம் ஆண்டு தமிழ்நாடு பேட்ச் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியுமான பி.சங்கர் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

செய்யாறு உதவி ஆட்சியராக தனது இந்திய ஆட்சிப் பணியைத் துவங்கிய திரு. சங்கர் அவர்கள் மாநிலத்தில் பல்வேறு பொறுப்புகளிலும், ஒன்றிய அரசின் செயலாளர் பதவிகளிலும், ஒன்றிய திட்டக்குழுவின் செயலாளர் பதவியிலும், இறுதியாக ஒன்றிய விழிப்புணர்வு ஆணையத்தின் தலைவராகவும் திறம்பட நேர்மையுடன் பணியாற்றியவர். பி.சங்கர் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் பணியாற்றிய சக இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சங்கர் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Former Chief Secretary ,P. Sankar ,Principal ,K. Stalin ,Chennai ,Mu. K. Stalin ,Government of Tamil Nadu ,Tamil Nadu Patch Indian Administration ,Officer ,Shankar ,Former ,Chief Secretary ,
× RELATED சொல்லிட்டாங்க…