சென்னை : கிறிஸ்தவ பள்ளிகளில் மாணவிகள் கூந்தலை வெட்டுவதாக வதந்தி பரவுவதாக தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
“வதந்தி
கிறிஸ்தவப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் கூந்தலை வெட்டுவதாகப் பள்ளிகல்வித்துறையைக் குறிப்பிட்டு காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
இது முற்றிலும் பொய்யான தகவல். இக்காணொளி கேரள மாநிலம் செம்மணாரில் உள்ள செயிண்ட் சேவியர் மேல்நிலைப் பள்ளியில் எடுக்கப்பட்டது. கடந்த 2019 ஆண்டு 39 பள்ளி மாணவிகள் புற்றுநோயாளிகளுக்காக தங்கள் தலைமுடியை தானம் செய்த போது எடுக்கப்பட்டதாக இக்காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. கேரளாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாணவிகள் தலைமுடியை தானம் செய்த நிகழ்வில் எடுக்கப்பட்ட காணொளியை வைத்து வதந்தி பரப்பி வருகின்றனர்.
மத வெறுப்பைத் தூண்டாதீர்! வதந்தியைப் பரப்பாதீர்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post “பள்ளி மாணவிகளின் கூந்தலை வெட்டுவதாக வதந்தி”… புற்றுநோயாளிகளுக்காக தலைமுடி தானம் என உண்மை சரிபார்ப்பகம் விளக்கம்!! appeared first on Dinakaran.