×

காரைக்காலில் அரசு ஊழியர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்

 

காரைக்கால்,செப்.11: காரைக்காலில் அரசு ஊழியர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கலெக்டர் மணிகண்டன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து காரைக்கால் மாவட்ட கலெக்டர் மணிகண்டன் உத்தரவின்படி ஆட்சியரின் செயலர் பாஸ்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது: பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இரு சக்கர வாகனங்கள், ஸ்கூட்டர்களை ஓட்டும் போது தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிவது கட்டாயம்.

இந்நிலையில், அரசு ஊழியர்களாகிய நாம் இந்த விஷயத்தில் முன்மாதிரியாக செயல்படவேண்டும். மேலும் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிவதின் முக்கியத்துவத்தை மக்களுக்கு தெரியபடுத்தும் விதமாக மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின்படி இரு சக்கர வாகனங்களில் வரக்கூடிய அனைத்து அரசு ஊழியர்களும் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிந்து அலுவலகம் வரவேண்டும். மேலும் இந்த உத்தரவு காரைக்காலில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள், மற்றும் தன்னாட்சி அமைப்புகளுக்கும் பொருந்தும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post காரைக்காலில் அரசு ஊழியர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Collector ,Manikandan ,Karaikal District ,Secretary of ,Ruler Baskar ,Dinakaran ,
× RELATED காரைக்காலில் கடல் உணவு பொருட்களை தயாரித்தல் பயிற்சி வகுப்பு