×
Saravana Stores

உபியில் நாச வேலை தண்டவாளத்தில் காஸ் சிலிண்டர் வைத்து ரயிலை கவிழ்க்க முயற்சி: டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு

கான்பூர்: அரியானா மாநிலம் பிவானியில் இருந்து உ.பி மாநிலம் பிரயாக்ராஜுக்கு கலிண்டி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் நேற்றுமுன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. கான்பூர் அருகே உள்ள சிவராஜ் பூர் பகுதியில் இரவு 8.20 மணியளவில் அதிவேகமாக ரயில் சென்றுகொண்டிருந்தது போது, தண்டவாளத்தின் தண்டவாளத்தின் நடுவே காஸ் சிலிண்டர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதை பார்த்ததும் அவசர கால பிரேக்கை பயன்படுத்தி ரயிலை அதன் டிரைவர் உடனடியாக நிறுத்தினார். அதற்குள் சிலிண்டர் மீது ரயில் இன்ஜின் மோதியது. உடனடியாக ரயில் இன்ஜின் டிரைவர் சம்பவ இடத்தை சென்று பார்வையிட்டார். ரயில் பெட்டிகளுக்கு அடியில் உடைந்து நொறுங்கிய சமையல் காஸ் சிலிண்டர் ஒன்றின் பாகங்கள், ஒரு சுவீட் பாக்ஸ் கிடந்தன.

மேலும், ஒரு பாட்டிலில் பெட்ரோலும், தீப்பெட்டி ஒன்றும் கிடைத்தது. காஸ் சிலிண்டரின் ஒரு பகுதி 50 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டு கிடந்தன. 20 நிமிடங்களுக்கு பிறகு ரயில் அங்கிருந்து மீண்டும் புறப்பட்டு சென்றது. அது பற்றிய தகவல் கிடைத்ததும் ரயில்வே பாதுகாப்பு படையினர், உ.பி தீவிரவாத தடுப்பு போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இது பற்றி தீவிரவாத தடுப்பு போலீசார் கூறுகையில், ‘தண்டவாளத்தில் காஸ் சிலிண்டரை வைத்து ரயிலை கவிழ்க்க நாசவேலையில் சிலர் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக ரயில் மோதியதில் சிலிண்டர் வெடித்து சிதறாமல் நொறுங்கிவிட்டது. ரயிலை டிரைவர் சாமர்த்தியமாக நிறுத்திவிட்டார். ரயில் கவிழாததால் அதில் பயணம் செய்தவர்கள் தப்பினர். இது தொடர்பாக அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த 6 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

The post உபியில் நாச வேலை தண்டவாளத்தில் காஸ் சிலிண்டர் வைத்து ரயிலை கவிழ்க்க முயற்சி: டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : UP ,Kanpur ,Biwani ,Ariana ,Prayagraj ,Shivrajpur ,
× RELATED பெண்களுக்கு ஆண் டெய்லர்கள் அளவு...