×

ஆன்மிக சொற்பொழிவு அல்ல, சனாதன சொற்பொழிவு; மகா விஷ்ணுவை அழைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: துரை.வைகோ வலியுறுத்தல்


திருச்சி: திருச்சியில் மதிமுக முதன்மை செயலாளர் துரை.வைகோ நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திருச்சி விமான நிலையம் சர்வதேச தரத்துடன் அமைந்துள்ளது. அதே நேரத்தில் அங்கு போதிய ஓடுதளம் இருந்தால் தான் விமானங்கள் வந்து செல்ல முடியும். எனவே ஓடுதள விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை வைத்துள்ளேன். திருச்சி விமான நிலையத்தில் சமஸ்கிருத்தில் பெயர் பலகை இருந்தது தேவையில்லாத ஒன்றாகும். சென்னையில் அரசு பள்ளியில் பேசிய அவர் உண்மையான பெயரை மாற்றி மகாவிஷ்ணு என ஆன்மிகம் பேசி வருகிறார்.

அவர் செய்தது சனாதன சொற்பொழிவு. இவர் ஆன்மிகத்தை வைத்து பிழைப்பு நடத்தும் அற்பன். மகாவிஷ்ணு பேசியது ஆன்மிக சொற்பொழிவு அல்ல, சனாதன சொற்பொழிவு. இந்த விஷயத்தில் மகா விஷ்ணுவை அழைத்து வந்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் தொடர்ந்து திமுக கூட்டணியில் இருக்கிறோம். தொடருவோம். மதவாத சக்தி வேரூன்ற கூடாது என்பது எங்களது நோக்கம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post ஆன்மிக சொற்பொழிவு அல்ல, சனாதன சொற்பொழிவு; மகா விஷ்ணுவை அழைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: துரை.வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Maha Vishnu ,Durai.Vaiko ,Trichy ,MDMK ,general secretary ,Durai Vaiko ,Trichy airport ,Durai ,Vaiko ,Dinakaran ,
× RELATED எனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன் : மகாவிஷ்ணு