×

லாரியில் சிக்கி தந்தை, குழந்தை பலி

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மேல் சிவிரி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (28) எலக்ட்ரீசியன். இவர் நேற்று காலை மனைவி தீபலட்சுமி (22) மற்றும் 10 மாத பெண் குழந்தை தனு ஆகியோருடன் மேல் சிவிரியிலிருந்து வெள்ளிமேடு பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு பைக்கில் சென்றார். மேல்சிவிரி சாலையில் எதிரே வந்த டிப்பர் லாரி, முத்துக்குமார் பைக் மீது மோதியது. இதில் முத்துக்குமாரும், 10 மாத குழந்தையும் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தனர். தீபலட்சுமிக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கண்முன்னே கணவனும், குழந்தையும் உயிரிழந்தது கண்டு தீபலட்சுமி கதறியழுதது பரிதாபமாக இருந்தது. தப்பியோடிய டிரைவரை வெள்ளிமேடுபேட்டை போலீசார் தேடிவருகின்றனர்.

The post லாரியில் சிக்கி தந்தை, குழந்தை பலி appeared first on Dinakaran.

Tags : Tindivanam ,Muthukumar ,Mel Siviri ,Villupuram district ,Deepalakshmi ,Tanu ,Meli Siviri ,Vellimedu Pettai ,
× RELATED விழுப்புரம் – திண்டிவனம் அருகே...