×

சவரனுக்கு ரூ320 குறைந்தது: தங்கம் விலையில் திடீர் மாற்றம்


சென்னை: தங்கம் விலை நேற்று திடீரென சவரனுக்கு ரூ320 குறைந்தது. கடந்த 2ம்தேதி தங்கம் விலை சவரன் ரூ53,360 என்று விலை குறைந்தது. தொடர்ந்து 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ360 குறைந்தது. 3ம் தேதி தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் சவரன் ரூ53,360க்கு விற்கப்பட்டது. 4ம் தேதி, 5ம் தேதியும் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. நேற்று முன்தினம் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு ரூ50 அதிகரித்து ஒரு கிராம் ரூ6,720க்கும், சவரனுக்கு ரூ400 உயர்ந்து ஒரு சவரன் ரூ53,760க்கு விற்கப்பட்டது. இதற்கிடையில் நேற்று யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலையில் மீண்டும் மாற்றம் காணப்பட்டது.

அதாவது நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ40 குறைந்து ஒரு கிராம் ரூ6,680க்கும், சவரனுக்கு ரூ320 குறைந்து ஒரு சவரன் ரூ53,440க்கும் விற்கப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.

The post சவரனுக்கு ரூ320 குறைந்தது: தங்கம் விலையில் திடீர் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Savaran ,Dinakaran ,
× RELATED தங்கம் விலை ஒரே நாளில் ரூ.960 உயர்வு