×

விதிமுறைகளை மீறி செபி தலைவர் மாதபி ரூ.36.50 கோடி வர்த்தகம்: காங்கிரஸ் மீண்டும் குற்றச்சாட்டு

புதுடெல்லி: அதானி குழுமம் தொடர்பான நிறுவனங்களில் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் (செபி) தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவல் புரி புச் முதலீடு செய்ததாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் சமீபத்தில் குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து மாதபி புரி புச், கணவர் தவல் புச் ஆகியோர் 2வது முறையாக நேற்று முன்தினம் விளக்க அறிக்கை வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘மாதபி புச் செபியின் முழு நேர உறுப்பினராகவும், பின்னர் செபி தலைவராகவும் இருந்த காலகட்டத்தில் ரூ.36.5 கோடி மதிப்புள்ள பட்டியலிடப்பட்ட பத்திரங்களில் வர்த்தகம் செய்துள்ளார். இது செபியின் விதிமுறை மீறலாகும். இதெல்லாம் பிரதமர் மோடிக்கு தெரியாதா? மேலும், 2017 முதல் 2021க்கு இடையே மாதபி புரி புச் வெளிநாட்டு சொத்துகளை வைத்திருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்தியா, சீனா இடையே எல்லை பிரச்னை நிலவும் நிலையிலும் சீன நிறுவனங்களில் செபி தலைவர் முதலீடு செய்திருப்பதாவது பிரதமர் மோடி அறிவாரா?’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

The post விதிமுறைகளை மீறி செபி தலைவர் மாதபி ரூ.36.50 கோடி வர்த்தகம்: காங்கிரஸ் மீண்டும் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Sebi ,Madhbi ,Congress ,New Delhi ,Hindenburg Company ,United ,States ,Madhabi Puri Buch ,Shareholding Regulatory Commission ,Thawal Buri Buch ,Adani Group ,Madabi ,president ,Dinakaran ,
× RELATED காங்கிரசின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் செபி தலைவர் மாதபி மறுப்பு