×

போலிச் சான்றிதழ் விவகாரம்: பூஜா கேட்கர் ஐஏஎஸ் பணியிலிருந்து நீக்கம்

புதுடெல்லி: போலிச் சான்றிழ் விவகாரத்தில் சிக்கிய பூஜா கேட்கரை ஐஏஎஸ் பணியிலிருந்து நீக்கி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றிய பூஜா கேட்கர், காரில் சைரன் பொருத்தியது, கூடுதல் ஆட்சியரின் அறையைப் பயன்படுத்தியது என தனது அதிகாரத்துக்கு மீறிய சில நடைமுறைகளைச் செய்துகொண்டதாகவும், போலி மாற்றுத்திறனாளி சான்றிதழ்களை சமர்ப்பித்தது, சாதி இடஒதுக்கீட்டிலும் வருமானத்தை குறைத்துக் காட்டி அதற்கான சலுகைகளைப் பெற்றதாகவும் புகார்கள் எழுந்தன.

இதையடுத்து அவரின் தேர்ச்சியை யுபிஎஸ்சி ரத்து செய்துள்ளது. எதிர்காலத்தில் அவர் யுபிஎஸ்சி தேர்வெழுதவும் கடந்த ஜூலை 31ம் தேதி நிரந்தர தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், பூஜா கேட்கரின் தேர்வை ரத்து செய்த சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, உடனடியாக அமலுக்கு வரும் வகையில், அவரை இந்திய நிர்வாக சேவையிலிருந்து (ஐஏஎஸ்) ஒன்றிய அரசு நீக்கி உள்ளது. ஐஏஎஸ் விதிமுறை 12ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன.

The post போலிச் சான்றிதழ் விவகாரம்: பூஜா கேட்கர் ஐஏஎஸ் பணியிலிருந்து நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Pooja Ketkar ,IAS ,New Delhi ,Union government ,Pooja Ketgar ,Pune district ,Maharashtra ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் புகாரால் பரபரப்பு ராகுலை விமர்சித்தாரா நொய்டா கலெக்டர்?