×

மாநிலங்களவையில் 6 நியமன எம்பிக்கள் மூலம் பாஜவுக்கு பெரும்பான்மை: வக்பு மசோதாவை நிறைவேற்ற வாய்ப்பு


புதுடெல்லி: மாநி லங்களவை எம்பிக்கள் பலம் 234 ஆக உள்ளது. இதில் பாஜ கட்சிக்கு 96 எம்பிக்கள் உள்ளனர். பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 113 எம்பிக்கள் உள்ளனர். பொதுவாக 6 நியமன எம்பிக்கள் அரசுக்கு சாதகமாக வாக்களிப்பார்கள். அந்த வகையில், 6 நியமன எம்பிக்கள் மூலம் மாநிலங்களவையில் பாஜ கூட்டணி 119 எம்பிக்களுடன் பெரும்பான்மை பலத்தை எட்டியிருக்கிறது. மாநிலங்களவையில் ஒரு மசோதாவை நிறைவேற்ற 117 எம்பிக்களின் ஆதரவு தேவை. இதை விட 2 எம்பிக்களை அதிகமாகவே பாஜ கூட்டணி வைத்துள்ளது. இதனால் வக்பு வாரிய சட்ட திருத்தம் போன்ற முக்கிய மசோதாக்களை பிற கட்சிகள் தயவின்றி ஆளும் பாஜவால் நிறைவேற்ற முடியும்.

இந்தியா கூட்டணியை பொறுத்த வரையில் காங்கிரசுக்கு 27 எம்பிக்களும், பிற கூட்டணி கட்சிகளுக்கு 58 எம்பிக்களும் உட்பட மொத்தம் 85 எம்பிக்கள் உள்ளனர். 9 எம்பிக்களை கொண்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், 7 எம்பிக்களை கொண்ட பிஜூ ஜனதா தளம் ஆகியவை எதிர்க்கட்சி கூட்டணிக்கு ஆதரவாக இருக்கின்ற கட்சிகள். 4 உறுப்பினர்களை கொண்ட அதிமுக, 3 சுயேச்சைகள் எந்த கூட்டணியிலும் அங்கம் வகிக்கவில்லை. தற்போது மாநிலங்களவையில் காஷ்மீரில் 4, ஆந்திராவில் 4, நியமன எம்பிக்களில் 4, ஒடிசாவில் 1 என மொத்தம் 11 இடங்கள் காலியாக உள்ளன.

The post மாநிலங்களவையில் 6 நியமன எம்பிக்கள் மூலம் பாஜவுக்கு பெரும்பான்மை: வக்பு மசோதாவை நிறைவேற்ற வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Rajya ,Sabha ,Wakpu Bill ,New Delhi ,Mani Langalavai ,NDA ,Rajya Sabha ,Waqf Bill ,Dinakaran ,
× RELATED கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்த நிலையில்...