×

தமிழகத்தில் வரும் 10-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை: தமிழகத்தில் வரும் 10-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும்.

இதனால், தமிழகத்தில் வரும் 10-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழகத்தில் வரும் 10-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Centre ,Midwest ,northwestern Bengal ,North Andhra ,South Odisha ,
× RELATED தமிழ்நாட்டில் 7 நாட்கள் மிதமான மழைக்கு...