×

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு விவகாரம் உச்ச நீதிமன்றம் தலையிட மறுப்பு

புதுடெல்லி: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை தடை செய்ய கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தில் பி.எல்வருண் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “தேர்தல் முடிவுகளை பாதிக்கக் கூடிய வகையில் வெளியாகும் கருத்துக் கணிப்பு முடிவுகளுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, “தேர்தல் மற்றும் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் தொடர்பான விவகாரங்களை கையாளுவது என்பது இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் வேலை. அதில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்பதால் மனுவை தள்ளுபடி செய்கிறோம்” எனக்கூறி வழக்கை முடித்து வைத்தார்.

 

The post தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு விவகாரம் உச்ச நீதிமன்றம் தலையிட மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,B. Lvarun ,Dinakaran ,
× RELATED காவலில் இருக்கும் குற்றவாளிகள்...