×

போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

தூத்துக்குடி, செப். 6: பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் போதைப் பொருட்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பற்றியும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தடுப்பு குறித்தும், காவல் உதவி செயலி பற்றியும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதேபோல் தூத்துக்குடி புனித ஜோசப் பெண்கள் பள்ளி சார்பில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஏடிஎஸ்பி ஆறுமுகம் கொடியசைத்து துவக்கி வைத்தார். போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்த பதாகைகள் ஏந்தி ஆசிரியர்கள், மாணவர்கள் என சுமார் 350 பேர் இந்த விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர். பள்ளியில் துவங்கிய பேரணி, திரேஸ்புரம் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.

The post போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Drug Prevention Awareness Rally ,Thoothukudi ,Tuticorin ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் பெய்து வரும் கனமழை...