×

எடப்பாடி ஆட்சியில் 116 மருத்துவர்களுக்கு தண்டனை இடமாற்றம் செய்த கொடூரம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை

சென்னை: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னால் சுகாதாரத்துறையில் எடப்பாடி பழனிசாமி ஆட்யின்போது இருந்த குளறுபடிகளும், குழப்பங்களும் மிகப்பெரிய அளவில் இருந்தன. 354 என்கின்ற அரசாணையை அமல்படுத்தக் கோரி மருத்துவர்கள் அதிமுக ஆட்சி காலத்தில் நடத்திய போராட்டங்களை யாரும் மறுந்து விட முடியாது, தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தினார்கள் என்பதற்காகவே 116 மருத்துவர்களுக்கு தண்டனை இடமாற்றம் தந்தார்கள். இதுவரை எந்த அரசும் செய்யாத ஒரு கொடும் காரியம் அது. அதேபோல் 116 தண்டனை இடமாற்றம் பெற்ற டாக்டர்களில் லட்சுமி நரசிம்மன் என்பவர் இங்கிருந்து சேலம் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டு அவர் மன அழுத்தத்தின் காரணமாக இறந்தே போனார்.

இப்படித்தான் மருத்துவத்துறையை அவர்கள் நிர்வகித்து வந்தார்கள் எடப்பாடி பழனிச்சாமியாக இருந்தாலும், அவருடைய ஆட்சிக்காலமாக ஆக இருந்தாலும், அதற்கு முன்னாள் இருந்த அவருடைய அந்த பத்தாண்டு கால ஆட்சியில் மருத்துவ துறையின் லட்சணம் இதுவாகத்தான் இருந்தது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக இந்த துறைக்கு தேவையான இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள். சுகாதார ஆய்வாளர்கள் போன்ற பணியிடங்கள் 1583 நிரப்பப்பட்டு இருக்கிறது, ஆக இந்த துறையில் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் 6,744 மருத்துவ துறை பணியாளர்களுக்கு புதிய பணி ஆணைகள் தரப்பட்டிருக்கிறது. இந்த தகவல் எல்லாம் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

The post எடப்பாடி ஆட்சியில் 116 மருத்துவர்களுக்கு தண்டனை இடமாற்றம் செய்த கொடூரம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Minister ,M. Subramanian ,CHENNAI ,Health Minister ,Palaniswami ,AIADMK ,
× RELATED காவிரியில் இருந்து தண்ணீர் எடுக்க...