×

கர்நாடகா மாநிலம் ராய்ச்சூரில் பள்ளி வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் மாணவர்கள் இருவர் உயிரிழப்பு..!!

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் பள்ளி வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் மான்வியின் புறநகரில் உள்ள லலோலா பள்ளியிலிருந்து ராய்ச்சூர் நோக்கி பள்ளி பேருந்து சென்றது. அப்போது ராய்ச்சூர் மாவட்டம் மான்வி தாலுக்காவில் உள்ள கபகல் என்ற பகுதி அருகே அரசுப் பேருந்து மீது தனியார் பள்ளி வாகனம் ஒன்று நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் சிக்கி இரண்டு பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களாக சமர்த் (7) மற்றும் ஸ்ரீகாந்த் (12) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் 32 குழந்தைகள் உட்பட சுமார் 40 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 3 பள்ளி மாணவர்கள் கவலைக்கிடமாகநிலையில் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலத்த காயம் அடைந்த குழந்தைகள் மேல்சிகிச்சைக்காக RIMS மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post கர்நாடகா மாநிலம் ராய்ச்சூரில் பள்ளி வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் மாணவர்கள் இருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka's Raichur ,BENGALURU ,Karnataka ,Raichur district ,Raichur ,Lalola School ,Manvi, Karnataka ,Raichur, Karnataka ,
× RELATED சுற்றுலா பயணிகள் பஸ் மீது தாவி...